[ஆதவன்]
மேடம்: திடீர்ச் செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமை அவசியம்.
இடபம்: பல வகைகளிலும் அனுகூலமான நாள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. காரியங்கள் சாதகமாக முடியும். உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.
மிதுனம்: எதிர்பாராத பணவரவுக்கும் திடீர்ச் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளது. பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவை.
கடகம்: காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான நாள். செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம்: செலவுகள் அதிகரிக்கும் நாள். கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். பிணக்குகள் நீங்கும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.
கன்னி: பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். முக்கியமான முடிவுகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
துலாம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஒத்து ழைப்புத் தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எதிரிகள் வகையில் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
விருச்சிகம்: வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பேசும்போது கவனமாக இருக்கவும்.காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படலாம். பாதிப்பு எதுவும் இருக்காது.
தனுசு: புதிய முயற்சி எதுவும் வேண்டாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செலவுகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலையும் சிலருக்கு ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.
மகரம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்னியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
கும்பம்: காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். செலவு செய்யவேண்டிவரும். பணவரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
மீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். மனவருத்தங்கள் நீங்கும். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.