[ஆதவன்]
மேடம்:
மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள். கூடுதலாக லாபம் கிடைக்கும். சிரமங்கள் அறவே நீங்கும்.
இடபம்:
உங்களுடைய பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கல்யாணப்பேச்சு வார்த்தை வெற்றி யடையும். நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. சில பொறுப்புகளை ஒப்படைப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.
மிதுனம்:
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள்.
கடகம்:
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.
சிம்மம்:
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். இழப்புகளை சரி செய்வீர்கள்.
கன்னி
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
துலாம்:
எந்தக் காரியத்தைத் தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மற்றவர்களிடம் வீண் கோபத்தைத் தவிர்க்கவும். கடினமாக உழைத்து லாபம் ஈட்டுவீர்கள்.
விருச்சிகம் :
குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். அலைச்சல் உண்டு, திடீர்ப் பயணங்கள் இருக்கும். தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கவனம் தேவைப்படும் நாள்.
தனுசு
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.
மகரம்:
உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கும்பம்
பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தி யோகத்தில் புதுப் பொறுப்புகள் தேடிவரும்.
மீனம்
சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.