(புதியவன்)
அரச தலைவர் அலுவலகத்தில் பதவிகளை வகிப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் விசித்திரமான மோசடிகள் தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரச தலைவர் அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசா பெற முயற்சிப்பவர்கள் என பலரை ஏமாற்றி, பணம் பெறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறான மோசடியாளர்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், இவ்வாறான நபர்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் அரச தலைவரின் மூத்த உதவிச் செயலாளர் பிரசாத் செனரத் என்ற அதிகாரியை +94 71 530 8032 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு, தகவல் பெற்றுக்கொள்ளுமாறும் அரச தலைவர் அலுவலகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.