(புதியவன்)
இலங்கையில் பணவீக்கம் காரணமாக குடும்பமொன்றின் மாதாந்த நுகர்வுச் செலவு 2023ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 283 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வைப்பகம் வெளியிட்டுள்ள பொருளாதார விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், இலங்கையில் குடும்பமொன்றுக்கு 2022ஆம் ஆண்டில் மாதாந்த நுகர்வுச் செலவு 88 ஆயிரத்து 704 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் குடும்பமொன்றுக்கான மாதாந்த நுகர்வு செலவு 1 இலட்சத்து 3 ஆயிரத்து 283 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
2022ஆம் மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் இந்நாட்டில் ஒரு குடும்பமானது உணவு அல்லாத பொருட்களுக்கு அதிகம் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.