சளி மற்றும் இருமல் தொல்லை அடிக்கடி அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு நோய் தான்.
சுலபமாக கிடைக்கக்கூடிய வெற்றிலையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் இருப்பதோடு ஆன்ட்டி செப்டிக் தன்மையும் உள்ளது. அல்சர், அஜீரணம், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என பல மருத்துவ பயன்களை கொண்டுள்ள வெற்றிலை சளி தொல்லையை சமாளிக்கவும் உதவுகிறது.
வெற்றிலையை பொதுவாக பெரியவர்கள் இயல்பாக சாப்பிடுவார்கள். ஆனால் குழந்தைகளை சாப்பிட வைப்பது கடினம்.
அதற்கான இலகு வழியை நாம் இங்கு நோக்குவோம்.
மிளகு மற்றும் சீரகத்தை வறுத்து அதனுடன் தேங்காய், பொட்டுக்கடலை, வெற்றிலை, மிளகாய், உப்பு, பூண்டு போட்டு அரைத்து எண்ணெயில் கடுகு, உளுந்து தாளித்தால் சுவையான வெற்றிலை சட்னி தயார்.
சுலபமாக செய்யக்கூடிய ருசி மிகுந்த இந்த சட்னியில் சத்துக்களும் இருக்கும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.