நீண்ட முடி என்பது அனைத்து பெண்களின் கனவு என்றே சொல்லலாம். அனால் தலைமுடியை சரியான முறையில் பேணிபாதுகாத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். எண்ணெய் எப்போதும் நீண்ட முடிக்கு நன்மை பயக்கும். தலைமுடிக்கு எப்போதும் எண்ணெய் தடவ வேண்டும். அவ்வாறு முடிவளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்கள் சிலவற்றை இங்கு நோக்குவோம்,
01.ரோஸ்மேரி எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெயில் சில துளிகள் ஜோஜோபா எண்ணெயை கலந்து முடியை மசாஜ் செய்யலாம்.
ரோஸ்மேரி எண்ணெயை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால் முடி நீளமாக வளரும்.
ஷாம்புவில் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெயைச் சேர்த்து முடியைக் கழுவலாம். இது தவிர கண்டிஷனரிலும் இந்த எண்ணெயை கலக்கலாம்.
02. தேங்காய் எண்ணெய்
சுத்தமான தேங்காய் எண்ணெயை கூந்தலில் தடவினால் முடி கருப்பாகும் மற்றும் முடி வளர்ச்சியும் ஏற்படுகிறது.
நீண்ட கூந்தலுக்கு சூடான எண்ணெய் சிகிச்சை எடுக்க வேண்டும். தலைமுடிக்கு எண்ணெய் தடவி லேசான மசாஜ் செய்வது மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
விரல் நுனிகளின் உதவியுடன் முடி மற்றும் உச்சந்தலையில் எண்ணெய் தடவவும். அதன்பின் ஒரு டவலை வெந்நீரில் ஊற வைத்து தலைமுடியைச் சுற்றி துண்டை போர்த்தி, சுமார் 5 நிமிடங்கள் வைத்திருங்கள்.
இந்த செயல்முறையை 3-4 முறை செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் எண்ணெய் முடி மற்றும் உச்சந்தலையில் நன்கு உறிஞ்சப்படும்.
03.ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் சருமம் மற்றும் முடி ஆகிய இரண்டிற்கும் நன்மை பயக்கும். முடி வளர்ச்சிக்கு உதவும் இந்த எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக உள்ளன. அதுமட்டுமல்லாமல் முடி சேதமடைவதையும் தடுக்கிறது. ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதால் கூந்தலும் பொலிவைத் தரும். இது முடிக்கு ஊட்டமளித்து, முடி உதிர்வதைத் தடுக்கிறது. ஆலிவ் எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை குளிப்பதற்கு முன் முடிக்கு பயன்படுத்தினால் சில மாதங்களில் பலன் கிடைக்கும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.