(புதியவன்)
வெள்ளவத்தை கடற்கரை வீதியில் உஸ்பெகிஸ்தான் காதலியுடன் உந்தருளியில் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள் குணவர்தன மற்றும் அவரது உஸ்பெகிஸ்தான் காதலியான நிக்கி குத்யா ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் களுபோவில போதனாமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர் தனது காதலியுடன் கடற்கரை சாலையில் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது அலெக்ஸாண்ட்ரா பக்க சாலை சந்திப்பு அருகே முச்சக்கரவண்டியில் விபத்து இடம்பெற்றமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.