வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், மக்கள் அனைவரும் கூகுளின் பயன்பாடுகளான ஜிமெயில், யூடியூப், டிரைவ் போன்றவற்றைப் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு நபரும் கூகுள் கணக்கை உருவாக்கி கூகுளின் பயன்பாடுகளை பயன்படுத்துகின்றனர். அதிலும் ஒரு சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை உருவாக்கி அதில் சில கணக்குகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு நீக்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலின்படி, டிசம்பர் 1ம் தேதி முதல் செயலில் இல்லாத கூகுள் கணக்குகள் நீக்கப்படவுள்ளது. இந்த தகவல் கடந்த மே மாதம் முதல் வெளியான நிலையில், தற்போது கூகுள் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், செயலற்ற கூகுள் கணக்கு என்பது 2 வருட காலத்திற்குள் பயன்படுத்தப்படாத கணக்கு ஆகும். குறைந்தது இரண்டு வருடங்கள் உங்கள் கூகுள் கணக்கு செய்ல்படாமல் இருந்தால், அந்த கணக்கையும் அதன் செயல்பாடுகளையும் நீக்கும் உரிமை கூகுளுக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.