கடற்தொழிலை ஜீவனோபாயமாக கொண்டிருக்கும் மன்னார் மாவட்டம், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹுனைஸ் நகர் கிராம மக்கள் பெரும்பான்மையானோர் அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கடற்கரை வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதில் தொழிலுக்கு செல்ல முடியாது பாரிய அசெளகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
நீண்டகாலமாக பழுதடைந்துள்ள தெரு விளக்குகள் பல இன்னமும் திருத்தப்படாமல் உள்ளதாகவும் பல உள்ளக வீதிகள் இதுவரை அமைக்கப்படாமல் இருப்பதும் உரிய வடிகால் வசதிகள் செய்யப்படாமை காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட இக் கிராம மக்கள் மழை காலங்களில் உள்ளக வீதிகளை பயன்படுத்துவதில் பல துயரங்களை அனுபவித்து வருவதாகவும் தொடர்புபட்ட அதிகாரிகள் குறித்த தெருவிளக்குகளை பொறுத்தித்தருமாறும் உள்ளக வீதிகளை செப்பனிட்டுத் தருமாறும் சீரான வடிகான் வசதிகளையும் அமைத்துதருமாறு ஹுனைஸ் நகர் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.