[புதியவன்]
இன்று அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் புலனம் (WhatsApp) முதலிடம் வகிக்கிறது. இப்போது புலனம் (WhatsApp) அலுவலகம், குடும்பம் என பல குழுக்களைக் கொண்டுள்ளது. அதில், நண்பர்கள் குழுக்கள் பொதுவாக எல்லா வகையான விஷயங்களைப் பற்றியும் விவாதிப்பார்கள். புலனம் (WhatsApp) உலகம் முழுவதும் தனிப்பட்ட மட்டுமல்ல, தொழில்முறை வேலைகளுக்காகவும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் புலனத்தில் புதிதாக ஐந்து நிறங்களில் தீம்களை கொண்டு வரவுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நோடிபிகேஷனைத் (Notification) பயனர்கள் தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ள முடியும். இந்த தீம்கள் பச்சை, நீலம், வெள்ளை பிங்க், ஊதா ஆகிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பின் பயனர்களுக்கு ஏற்றவாறு பல கலர்களை சேர்க்கவும் பரிசீலித்து வருகிறது. தற்போது இந்த அப்டேட் பீட்டா சோதனையில் உள்ளது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.