ஆதவன்.
மேடம்: தன்னம்பிக்கையுடன் செயற்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
இடபம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர்ப் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். முக்கியமான பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும்.
மிதுனம்: சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர்ச் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
கடகம்: தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது.
சிம்மம் : இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும்.
கன்னி: இன்று மனதில் அவ்வப்போது சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். மாலையில் உறவினர் ஒருவர் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு.
துலாம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காகச் செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு தெய்வப் பணி களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
விருச்சிகம்: எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். கூடியவரை இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ள வேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும்.
தனுசு: மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார்.
மகரம்: புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயற்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
மீனம்: மனதில் தைரியமும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயற்படு வீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.