மேடம்: ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். கல்யாணப் பேச்சு சாதகமாக முடியும். மகிழ்ச்சியான நாள். திடீர்ச் செலவுகளும் ஏற்படும். முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் நற்பலன்கள் கூடுதலாகும்.
இடபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமற்போன முக்கியமான ஆவணம் ஒன்று கிடைக்கும். புது யுக்திகளை கையாள்வீர்கள்.
மிதுனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை புரிந்துகொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள்.
கடகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.
சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். இழப்புகளை சரி செய்வீர்கள்.
கன்னி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
துலாம்: எந்தக் காரியத்தைத் தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மற்றவர்களிடம் வீண் கோபத்தைத் தவிர்க்கவும். கடினமாக உழைத்து இலாபம் ஈட்டுவீர்கள்.
விருச்சிகம் : குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். அலைச்சல் உண்டு. திடீர்ப் பயணங்கள் இருக்கும். தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கவனம் தேவைப்படும் நாள்.
தனுசு: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.
மகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்கு வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கும்பம்: பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உற வினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புதுப் பொறுப்புகள் தேடிவரும்.
மீனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சு மங்களை கொள்வீர்கள். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.