இன்றைய ராசிபலன் பங்குனி 02
இன்றைய ராசிபலன் பங்குனி 02

 
மேடம் : மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.மன உறுதியுடன் முடிவெடுத்து செயற்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கியமான முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சிலருக்கு பேச்சினால் வீண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இடபம்: உற்சாகமான நாள். துணிச்சலாகச் செயற்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். சற்று அலைச்சலும் சோர்வும் உண்டாகும். மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும். காரியத்தடைகள் விலகும்.

மிதுனம் : திடீர்ச் செலவுகள் ஏற்படக்கூடும். புதியமுயற்சி அனுகூலமாக முடியும். செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்ததைவிடவும் குறைவாகத்தான் இருக்கும். விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

கடகம்: எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை தொடங்குவது நல்லது. உடல் அசதி உண்டாகும். விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

சிம்மம்: எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.புதிய முயற்சியை தவிர்க்கவும். பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். நிதானம் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். சிறுசிறு வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கன்னி : புதிய முயற்சி சாதகமாக முடியும். எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். மனதில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

துலாம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.

விருச்சிகம் : எதிர்பார்த்த பணம் வந்தாலும்எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

தனுசு: மனதில் உற்சாகமும், செயல்களில் பர பரப்பும் காணப்படும். அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள். ஆதாயம் பெற வாய்ப்பு உள்ளது.

மகரம்: புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை முழு ஒத்துழைப்பு தருவார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் செயற்படுவீர்கள். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். மகிழ்ச்சி ஏற்படும். விற்பனை அமோகமாக நடைபெறும்.

மீனம்: வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். சிலருக்கு திடீர் பண வரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் இடையூறுகள் ஏற்படக் கூடும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

310 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.