(புதியவன்)
மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.இதன்படி, குறித்த காலப்பகுதியில் 40 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது முட்டை உற்பத்தியுடன் தொடர்புடைய மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாக கால்நடைகள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் நுகர்வோருக்கு முட்டைகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.