(புதியவன்)
இஸ்ரேலில் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந் நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு இஸ்ரேலில் உள்ள நெவாடிம் வானூர்தி தளத்தில் ஹெலிகொப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் UH-60 Black Hawk என்ற தாக்குதல் ஹெலி கொப்படரே சேதமடைந்துள்ளதாக இஸ்ரேல் படைத்துறை வட்டாரங்கள்
தெரிவித்தன.
இந்த விபத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என இஸ்ரேல் படையினர் தெரிவித்துள்ளனர்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.