மன்னார் தாழ்வுபாடு பகுதியில் ஹொக்கைன் வகை போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 9 பேர் அடங்கிய குழுவினரின் சுற்றிவளைப்பின் போதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
34 வயதான குறித்த நபரிடமிருந்து 1 கிலோ 12 கிராம் ஹொக்கைன் வகை போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 30 மில்லியனுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை முன்னிலைப்படுத்தவுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.