பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தான் முன்மொழிந்த சிறப்பு சார்பியல் கொள்கை மற்றும் பொது சார்பியல் கொள்கை ஆகியவை குறித்து கைப்பட எழுதிய பிரதியானது சுமார் 40 கோடி (இலங்கை ரூபா) மதிப்பீட்டில் ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரத்தில் கிறிஸ்டி ஏல நிறுவனம் நடத்திய ஏல விற்பனையிலேயே குறித்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 14 பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரதியில் சார்பியல் கொள்கையின் பயன்பாடு குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.