(மாதவன்)
யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் தனது தாடியால் பட்டா ரக வாகனத்தை ஏற்கனவே இழுத்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இன்றிலையில் (14)நேற்றையதினம் 2600 கிலோ எடையுடைய உழவு இயந்திரத்தை தனது கழுத்தினால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
முன்பதாக திருச்செல்வத்தின் முயற்சிகள் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில் அவரை ஊக்குவிக்கும் முகமாக கொழும்பு காலி முகத்திடலில் 1000 மீற்றர் தூரத்திற்கு 1550 கிலோ கிராம் எடையுடைய பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தூரம் தாடியாலும், 500 மீற்றர் தூரத்தை தனது தலை முடியாலும் இழுத்து திருச்செல்வம் அந்த முயற்சியினூடாக உலக சாதனையை நிகழ்த்தினார்.
நேற்று மாலை நடைபெற்ற குறித்த சாதனை முயற்சியானது 2600 கிலோ எடை கொண்ட உழவு இயந்திரத்தை 50 மீற்றர் தூரம் வரை திருச்செல்வம் தனது கழுத்தினால் இழுத்து சாதனை படைத்ததுடன் அது உலகசாதனைப் பத்தகத்திலும் பதிவானது.
குறித்த சாதனை படைத்த திருச்செல்வத்திற்கு அனுசரணை வழங்கியிருந்த நிறுவனத்தால் சான்றிதழ் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.