ஜப்பானிய நிறுவனம் ஒன்று 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் பாரிய ரோபோ ஒன்றை உருவாக்கி வருகிறது.
இதன் இலங்கை மதிப்பு சுமார் 980 கோடி ரூபாய் ஆகும்.
இந்த ரோபோவுக்கு ஆர்காக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது 4.5 மீட்டர் உயரமும் 3.5 தொன் எடையும் கொண்டது. ஒரு நபர் ரோபோவிற்குள் நுழைய முடியும் மற்றும் ரோபோவிற்குள் இருக்கும் கட்டுப்பாட்டு அமைப்பு, உள்ளே இருக்கும் நபரை ஆர்காக்ஸின் மூட்டுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
இம்மாத இறுதியில் ஜப்பானில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
நான்கு சக்கரம் கொண்ட இது இரண்டு முகங்கள் கொண்டது.
இதை ரோபோவாகவோ அல்லது காராகவோ செயற்படுத்த முடியும்.
காராக செயல்படும் போது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.