பிரதமர் மோடியை செயற்கை நுண்ணறிவு புண்ணியத்தில் பாடகராக்கி வலம்வரச் செய்து, அழகு பார்க்கும் அட்ராசிட்டி இணையத்தில் அதிகரித்துள்ளது.
மோடியின் உச்சரிப்பில் தமிழ் பாடல் வரிகள் வடக்கத்திய பாடகரான உதித் நாராயணன் பாணியிலான தனி ரகமாக எதிரொலிக்கின்றன. ’வணக்கம்... நன்றி’ மட்டுமன்றி, குறள்கள் வரை மோடியின் தமிழக வருகையின்போது அவரது குரலில் எதிரொலிப்பதுண்டு.
தமிழின் கானா முதல் ஹஸ்கி வாய்ஸ் வரை AI தயவில் மோடியின் குரலை பின்னிப்பெடலெடுத்து பாட வைத்திருக்கிறார்கள். ’ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு’ என்ற தலைமுறை கடந்த பாடல், ’மண்ணில் இந்த காதலின்றி’ என எஸ்பிபி மூச்சுவிடாது பாடியது என மென்மையான பாடல்கள் மட்டுமல்ல, ஜெயிலர் திரைப்படத்தின் காவாலா வெர்சன் குரலிலும் மோடி அதிரடிக்கிறார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.