[புதியவன்]
உலகிலேயே வாகனங்கள் மிக மெதுவாக இயக்கப்படும் நகரமாக லண்டன் இருக்கிறது. இங்கே மணிக்கு 20 மைல் வேகத்திலேயே வாகனங்களை ஓட்டுநர்கள் இயக்குவதாக ஓர் ஆய்வறிக்கை கூறுகின்றது. மத்திய லண்டனில் 10 கிமீட்டர் தூரத்தைக் கடக்க 37 நிமிடங்கள் 20 நொடிகள் ஆவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாம்டாம் என்ற இருப்பிடம் (லொகேஷன்) கண்டறியும் தொழில்நுட்ப நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 55 நாடுகளில் 387 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் லண்டன் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டும் லண்டனே முதலிடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனுக்கு அடுத்தபடியாக அயர்லாந்து நாட்டின் டப்ளின், கனடாவின் டொரன்டோ, இத்தாலியின் மிலன், பெருவின் லிமா ஆகிய நகரங்கள் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படும் நகரங்களின் பட்டியலில் உள்ளன. பிரிட்டனிலேயே லண்டனுக்கு அடுத்தபடியாக மேன்செஸ்டர் நகரில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன. அடுத்ததாக லிவர்பூல், ப்ரிஸ்டால், எடின்பர்க் நகரங்கள் உள்ளன. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.