வலி.வடக்கு வயாவிளானில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து சேவை இன்று செவ்வாய்க்கிழமை(16) அமைச்சர் தலைமையில் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் வயாவிளான் திக்கம்புரை டெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்பேருந்து சேவையானது வயாவிளான் சுதந்திரபுரம் ஊடாக வயாவிளான் மத்திய கல்லுரி ஈழகேசரி பொன்னையா வீதி ஊடாக குரும்பசிட்டி- கட்டுவனக் சந்தி ஊடாக தெல்லிப்பழை மருத்துவமனையைச் சென்றடைந்து பின்னர் கே.கே.எஸ் வீதி ஊடாக யாழ் நகரை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.