இங்கிலாந்தில் தற்போது இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்தின் வடபகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் விளைந்த பிரமாண்டமான வெங்காயமொன்றையும் காட்சிபடுத்தியுள்ளார்.
குறித்த வெங்காயம் 8.97 கிலோ எடை கொண்டதாக காணப்படுகின்றது. அத்தோடு இந்த வெங்காயம் உலகிலேயே பெரிய வெங்காயம் என்று உலக சாதனையும் படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டு 8.4 கிலோ வெங்காயமே உலகின் பிரமாண்ட வெங்காயம் என்ற சாதனையைப் படைத்திருந்தது. இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.