உலகின் வயதான நாய் என கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 'பொபி' கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது.
ஒரு நாயின் சராசரி ஆயுட்காலம் சுமார் 15 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் பொபி இதனை முறியடித்து சுமார் 31 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து தனது 31 ஆவது வயதில் உயிரிழந்துள்ளது.
'பொபி' போர்த்துக்கேய 'ராஃபெரியோ டோ அலென்டெஜோ' நாய் இனமாகும்.
உடல்நலக்குறைவு காரணமாக கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 'பொபி' உயிரிழந்ததாக 'பொபி' உரிமையாளர் லியோனல் கோஸ்டா தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.