பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ரஷ்யாவின் போர் விமானம் ஒன்று, தீப்பற்றி ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நேற்று ரஷ்யாவின் MiG-31 ரக போர் விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக தீப்பற்றியது.
தீ பற்றியதை தொடர்ந்து Rizh-Guba தீவுக்கு அருகில் போர் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, மர்மன்ஸ்க் (Murmansk) பகுதியில் உள்ள ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் போர் விமானத்தின் விமானிகள் இருவரும் பத்திரமாக உயிர் தப்பினர் என்றும், உலங்குவானூர்தியின் உதவி கொண்டு அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் MiG-31 போர் விமானம் வானில் தீப்பற்றி எரிந்து விழும் காட்சிகள் இணையதளம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது
இந்த சம்பவமானது உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஓராண்டை கடந்து மீண்டும் தீவிர தன்மையை பெற்று வரும் சூழலில் நிகழ்ந்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.