இனியபாரதி.
சர்வதேச அளவில் அதிகளவு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில், இந்தியாவே முதலிடத்தில் இருந்து வருகின்!றது என்று சுவீடனின் தலைநகரான ஸ்டோக்ஹோமில் செயற்படும் தொண்டு நிறுவனமொன்று அறிக்கையிட்டுள்ளது.
சர்வதேச அமைதியைதன் கருப்பொருளாகக் கொண்டு செயற்படும் 'சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்', ஆயுத இறக்குமதியில் முன்னிலையில் உள்ள நாடுகள் தொடர்பான தகவல்களை ஆண்டுதோறும் தெரிவித்து வருகின்றது. இதன்படி, கடந்தவருடம் உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 9.8 வீதமாகவும், சவூதி அரேபியாவின் பங்கு 8.5 வீதமாகவும், உக்ரைனின் பங்கு 4.9 வீதமாகவும் உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.