மட்டக்களப்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பக்கியல்ல பகுதியைச் சேர்ந்த சச்சி வயது 19 இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், அதே பகுதியைச் சேர்ந்த ச.லோஜன் வயது 23 இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
gaiwn6
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.