முன்னாள் மேடக் எம்.பி.யும், மூத்த திரைப்பட நடிகையுமான விஜயசாந்தி முன்பு பாஜகவில் இருந்தார். பாஜகவில் அவருக்கு உரிய முக்கியத்துவத்தை தரவில்லை எனவும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கூட அவருக்கு தேர்தல் தொடர்பான எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை எனவும் இதனால் விஜயசாந்தி கடும் அதிருப்தியில் இருந்ததாகவும், பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் இருந்தும் ஒதுங்கி வந்ததால் பாஜகவில் இருந்து விலகி விரைவில் காங்கிரஸில் சேரப் போவதாக சமீபத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லு ரவி தெரிவித்தார்.
இதற்கிடையில் நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார். இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்த நடிகை விஜய சாந்தி, தெலங்கானா மாநில பரப்புரைக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.