இனியபாரதி.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடமையாற்றிய மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஏ.சிறீதரன் இன்று வெள்ளிக்கிழமை(03) முதல் நடைமுறையாகும் வகையில் கொழும்பு டீ சொய்சா பெண்கள் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதே சமயம் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஜெ.கஜேந்திரன் புதிதாக யாழ் போதனா மருத்துவமனையில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
எனவே, மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஏ.சிறீதரனின் இடமாற்றமானது வழமையான இடமாற்றத்தின் அடிப்படையிலேயே செல்கின்றார் எனவும் இதுவரை பொறுப்பில் இருந்த விடுதியையும் அவருடைய கிளினிக் நோயாளர்களையும் மகப்பேற்று மருத்துவ நிபுணர் எஸ். சிறீசரவணபவா பொறுப்பேற்கவுள்ளார் என மருத்துவமனை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதுவரை மகப்பேற்று மருத்துவ நிபுணர் எஸ். சிறீசரவணபவா பொறுப்பில் இருந்த விடுதியையும் அவருடைய கிளினிக் நோயாளர்களையும் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஜெ.கஜேந்திரன் பொறுப்பேற்கவுள்ளார்.
மருத்துவ நிபுணர் சிறிதரன் கடந்த 18வருடங்கள் யாழ் போதனா மருத்துவமனையில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.