(புதியவன்)
யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் த.சித்தார்த்தன் ஆகியோருக்கு விவசாய அமைச்சின் ஊடாக கோழிக் குஞ்சுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு விவசாய அமைச்சு ஊடாக யாழ் மாவட்டத்திலும் கோழிக் குஞ்சுகள் விநியோகம் இடம்பெறவுள்ளது. இவ்வாறாக விநியோகப் பட்டியலில் நான்கு பிரதேச செயலாளர் பிரவுகள் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களில் அனுமதிக்கப்பட்ட தொகை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 160 கோழிக் குஞ்சுகளும் இரண்டு இன்குபேற்றர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் த.சித்தார்த்தனுக்கு தலா ஒரு இன்குபேற்றரும் 80 கோழிக் குஞ்சுகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன என மாவட்டச் செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.