புதினம் தெரியுமோ...!!!
புதினம் தெரியுமோ...!!!

ரணில் அரச தலைவர் தேர்தலில போட்டி போடுவாரா? இல்லையா? எண்டதை விடவும் இப்ப இஞ்சத்தை ஆக்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி அடுத்த 'ஜீ.ஏஆர் எண்டு அறியிறதிலதான் கடும் ஆர்வமா இருக்கினம். நேற்றும் பட்சி உந்த விசயத் தைப் பற்றிச் சொன்னது. அதுக்குப் பிறகு சாடை மாடையா சில தகவல்கள் காதில விழுந்தது. ரணிலும் இந்த விசயத்தில இறங்கியிருக்கிறார் எண்டதுதான். ஆனால் அவர் நேரடியா இறங் கேலை. தனக்கு நம்பிக்கையான ரவி கருணா நாயக்கவைத்தான் இந்த அலுவலைப் பாக்கச் சொல்லியிருக்கிறாராம். இடையில கொஞ்சக் காலம் மனக்கசப்பில ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு ஒதுங்கியிருந்த ரவி கருணாநாயக்கதான் இப்ப ரணிலுக்கு அடுத்ததா அந்தக் கட்சியை ஆட் டிப்படைக்கிறாராம். அவ்வளவு ஏன், ரணிலுக்கு கன விசயங்களில அட்வைஸ் பண்ணுறதும் ரவி கருணாநாயக்கதான்.

இப்ப அதே ரவி கருணாநாயக்கட்டத்தான் கிளி நொச்சி, யாழ்ப்பாணத்துக்கு அடுத்த 'ஜீ.ஏ' ஆரெண்டு டிசைட் பண்ற பொறுப்பைக் குடுத்தி ருக்காம். அந்தாளும் இந்த விசயத்தில இப்ப தீயா வேலை செய்யிறாராம். தனக்கு நெருக்கமான எம்.பி.மார், அதிகாரியளிட்ட ரவி கருணாநாயக்க நேரடியா போன் பண்ணி, அடுத்த 'ஜீ.ஏஃக்கு ஆரைப் போடலாம் எண்டு அவையின்ர நாடி பிடிச் சுப் பாத்திட்டு, அதைப்பற்றி உடனேயே ரணிலுக் கும் அப்டேட் பண்றாராம். அநேகமா அடுத்த கிழமைக்குள்ள இந்த ரண்டு மாவட்டத்துக்கும் புது 'ஜீ.ஏ'யை போட்டிடுவினம் போல கிடக்கு. வடக்கில இருந்து ஆரும் ரணிலுக்கும், ரவி கருணா நாயக்கவுக்கும் திருப்தியா இல்லாததால கொழும் பில இருக்கிற ஒரு தமிழ் அதிகாரியைத்தான் யாழ்ப்பாணத்துக்கு ‘ஜீ.ஏ'யா போட இருந்தவை யாம். ஆனால் அந்த அதிகாரி மாட்டன் எண்டிட் டாராம். 'யாழ்ப்பாணத்தில ஒவ்வொருத்தரும் ஒவ் வொரு அரசியல். அப்பிடி அரசியல் அழுத்தத்துக்க என்னால வேலை செய்யமுடியாது' எண்டு அந் தாள் வெட்டு ஒண்டு துண்டு ரண்டாச் சொல்லிப் போட்டுதாம். அதால அவரை விட்டிட்டு.இப்ப பழையபடி வடக்கிலயே அடுத்த ‘ஜீ.ஏ ஆரெண்டு தேடுற படலம் தொடங்கியிருக்கு.

அதில இன்னொரு விசயமும் கிடைச்சது. ரவி கருணாநாயக்க அடுத்ததா ஆரை கிளிநொச் சிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் ‘ஜீ.ஏயா போடலாம் எண்டு அபிப்பிராயம் கேட்டவரெல்லோ. அப்ப அவருக்கு ஆரைப் போடலாம் எண்டதை விடவும், ஆரையெல்லாம் போடக்கூடாது, ஏன் போடக் கூடாது எண்டு 'போட்டுக்குடுத்தவை தான் கூட வாம். இப்பிடி எல்லாரும் எல்லாருக்கும் குழிபறிச் சால், கடைசியா சிங்கள ஆளைத்தான் அவங்கள் 'ஜீ.ஏ'யா போடுறாங்களோ தெரியாது.

(16.03.2024 - உதயன் பத்திரிகை)
#eelamnews #srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate #புதினம்

367 2

2 Comments

* * * <a href="http://hrplanetexperts.in/attachment/go.php">Apple iPhone 15 Free</a> * * * hs=a56809626e35356978a5eefe2f448777* 26-Mar-2024

2zvt7p

* * * Apple iPhone 15 Free: http://hrplanetexperts.in/attachment/go.php * * * hs=a56809626e35356978a5eefe2f448777* 26-Mar-2024

o8h0vn

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.