என்னதான் காசு கொட்டிக்கிடந்தாலும், இன்னும் எப்பிடி எப்பிடியெல்லாம் அந்தக் காசைச் சேர்க்கலாம் எண்டதுதான் கனபேரின்ர நினைப்பா இருக்கும். அப்பிடியான ஆசைக்கு அதிகாரியள் மட்டும் விதிவிலக்கில்லை. ஆனாலும் அப்பிடி அவையள் ஆசைப்பட்டாலும் அதுக்குக் குறுக்க ரூல்ஸுகள் வந்து முட்டுக்கட்டை போடுறதால் குறுக்கு வழியளாலதான் அவை உழைக்க முடியும்.
அரசாங்கத்தில் உள்ள நிர்வாக உயரதிகாரிகளில 'கிரேட்வன் ஒப்பீஸர்ஸ்' எண்டுற முதல் தர அதிகாரியளுக்கு அரசாங்கம் கனக்கச் சலுகைகளைக் குடுத்திருக்கு. அதில ஒண்டுதான், அவையின்ர வாகனச் செலவுக்கு அரசாங்கமே காசு குடுக்கிறது.இந்த 'கிரேட் வன் ஒப்பீஸர்ஸ்' ஒப்பீஸ் வாகனத்தில வேலைசெய்யிற மாவட்டத்துக்குள்ள போய் வாறதுக்காக ஒவ்வொரு மாசமும் 60 லீற்றர் டீசலுக்கான காசை, அவையின்ர சம்பளத் தோட சேர்த்து அரசாங்கம் குடுக்கும். கூடுதலா இந்த 'கிரேட் வன் ஒப்பீஸர்ஸ்' தங்கட தனிப்பட்ட தேவைக்காகத்தான் ஒப்பீஸ் வாகனத்தைப் பாவிக் கிறது கூட.அப்பிடி ஒப்பீஸ் வாகனத்தைப் பாவிக்காமல் அவையள் சொந்த வாகனத்தைப் பாவிச்சினம் எண்டால், இந்த 60 லீற்றர் டீசல் காசைவிட மேலதிகமாக இன்னும் ஒரு 60 ஆயிரம் ரூபாவை அரசாங்கம் இவைக்கு சம்பளத்தோட குடுக்கும். ஏனெண்டால் சொந்த வாகனம் எண்டால், அதுக்குரிய ட்ரைவர் சம்பளம், வாகனத் தேய் மானம் எண்டதுகளுக்காகத்தான் இந்த மேலதிக கொடுப்பனவாம். எப்பிடியும் கூட்டிக் கழிச்சுப் பார்த் தால், சொந்த வாகனம் பாவிக்கிற 'கிரேட் வன் ஒப்பீஸர் மாருக்கு 84 ஆயிரம் ரூபா சம்பளத்தை விட மேலதிகமாகக் கிடைக்கும்.
இந்த ரூல்ஸை வைச்சுத்தான் இஞ்ச இருக்கிற சில கிரேட் வன் ஒப்பீஸர்ஸ்' தங்கட பொக்கெற்றை நிரப்பிக் கொள்ளுகினமாம். முக்கியமா வடக்கு மாகாணத்தில உள்ள சில கச்சேரியளில மேல்மட்டங்களில் உள்ள 'கிரேட்வன் ஒப்பீஸர்ஸ்' தாங்கள் சொந்த வாகனத்தைப் பாவிக்கிறம் எண்டு இந்த அலவன்ஸை அப்பிடியே
அள்ளுகினமாம். ஆனால் உண்மையில அவை வீட்டை இருந்து ஒப்பீஸுக்கு வாறதுக்கு மட்டும் தான் தங்கட சொந்த வாகனத்தைப் பாவிக்கினம், வேலை விசயமா வெளியில போகோணும் எண்டால் ஒப்பீஸ் வாகனத்தில தான் போய் வருகினமாம். அதெப்பிடி, சொந்த வாகனத்தில வந்து போறமெண்டிட்டு, இப்பிடி ஒப்பீஸ் வாகனத்தைப் பாவிச்சால் ஓடிட்காரர் பிடிக்காயினமோ? எண்டு கனபேர் யோசிப்பியள். நீங்களே இப்பிடி யோசிக்கிறியள் எண்டால், 'கிரேட் வன் ஒப்பீஸர்ஸ்' எப்பிடி யோசிப்பினம்? அவை உதுக்கு ஒரு வழி வைச்சிருக்கினம். தங்களுக்குக் கீழ வேலை செய்யிற ‘டீ.ஓ' மாரின்ர பேரில வாகனத்தைக் கொண்டு போறதாப்பதிஞ்சு போட்டு, தாங்கள்தான் அதைக் கொண்டு போயினம். அப்பிடிச் செய்தால், வாகனத்துக்கு வாகனமும் ஆச்சுது. காசுக்குக் காசும் ஆச்சுது. உண்மையில ‘டீ.ஓ' மாருக்கு ஒப்பீஸ் வாகனத்தில போய்வர அனுமதியில்லைத்தான். ஆனால் மாவட்டச் செயலர் தற்துணிவில அப்பிடி போக விடலாமாம். அந்த ரூல்ஸை வைச்சுத்தான் சிலர் குளிர் காயினம் எண்டு கதை. பாத்தியளோ மேன்மக்களின்ர விளையாட்டை?
(01.04.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.