(பட்சி)
தலை இருக்க வாலாட வெளிக்கிட்டால், தலைக்குத் தான் சிக்கல். இப்ப அப்பிடிச் சில வாலுகளால தான் தமிழரசுக் கட்சியின்ர மாநாடும் குழம்பினதெண்டு எல்லாருக்கும் நல்லாவே தெரியும். ஆனால் இந்தக் குழப்பம் தானா நடக்கேலை. சிலர் இந்த மாநாட்டைக் குழப்பப் போயினம் எண்டு பட்சிக்கு நாலைஞ்சு நாளைக்கு முதலே தெரியும். ஆனாலும் அதை முதலே சொல்லி குழப்பத்தை இன்னும் பெரிசாக்கக் கூடாதெல்லோ. ஆனால் இப்ப தான் மாநாடு குழம்பிட்டுதே. அதால இப்ப அதைச் சொல்லியே ஆகோணும்.
யாழ்ப்பாணத்தில உள்ள ஒரு ஹொட்டலில் தான் முந்தி விக்கியரைக் கவுக்கிறதுக்கு சதி ஆலோசனை நடந்தது. அதே ஆக்கள் நாலைஞ்சு நாளைக்கு முதல், அதே ஹொட்டலுக்குப் போயி ருக்கினம். தமிழரசுக் கட்சியின்ர புதுத்தலைவரா சிறீதரனை இருக்க விடக் கூடாது எண்டு வந்தவை எல்லாரும் தங்கட உள்ளக்கிடக் கையை வெளியில கொட்டித் தீர்த்திருக்கினம். மாவையர் கடைசி நேரத்தில, பொதுச்சபைப் பட்டியலில இல்லாத 7 பேரைக் கொண்டந்து வாக்களிக்க விட்டது சட்டவிரோதம் எண்டு வழக்குப் போடுறதைப் பற்றித்தான் முதல்ல கதைபட்டிருக்கு. அப்பிடி வழக்குப் போட்டால் சிறீதரன் தலைவரா இருக்கிறதுக்கும் இடைக்காலத் தடை கிடைக்கும் எண்டது அவையின்ர எண்ணம். ஆனால் அந்தப் பட்டியலில வந்தவையை சிறீதரனும், சுமந் திரனும் சம்மதிச்சுத்தான். வாக்களிக்கவிட் டவை. அதால அதைவைச்சு வழக்குப் போட் டால் வெல்ல ஏலாது எண்டு அவையே முடி வெடுத்திருக்கினம்.
அதுக்குப் பிறகு தான், மாநாட்டைக் குழப் புவம் எண்டு முடிவெடுத்திருக்கினம். எப்பிடியும் சிறீதரன் தரப்பு. மட்டக்களப்பில இருந்து சிறீநேசனைத் தான் பொதுசெயலாளர் பதவிக்கு போடப்போயினம் எண்டதும் எல்லாருக்கும் தெரிஞ்சிட்டு. அதால அதுக்கு எதிரா ஒராளைப் போட்டால், குழப்பம் வருமெண்டு யோசிச்சிருக்கினம். ஆனால் அப்பிடி ரண்டுபேர் போட்டி போட்டால், வாக்கெடுப்பு வைக்க வேண்டி வரும். வாக்கெடுப்பு வைச்சால், சிறீநேசன் வெல்லத்தான் வாய்ப்பிருக்கு. அதால தாங்கள் போடுற ஆள் வெல்லவும் வேணும், வாக்கெடுப்பும் வைக்காமல் இருக்கோணுமெண்டா அதுக்கு என்ன குறுக்குவழி எண்டு அந்த ஹொட்டலில அவை 'ரூம்' போட்டு யோசிச்சதில கிடைச்ச 'ரூட்'தான். மத்தியகுழுக் கூட்டம். மத்தியக் குழுவைக் கூடினால் அவைக்கு என்ன லாபம்? அதால என்ன குறுக்குவழி கிடைக்கும்? எண்டெல்லாம் கனக்க யோசிக்காதையுங்கோ.எல்லாம் விலாவாரியா பட்சி நாளைக்குச் சொல்லும்.
29/01/2024 - உதயன் பத்திரிகை
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.