புதினம் தெரியுமோ!
புதினம் தெரியுமோ!

(பட்சி)

வீட்டுக் கட்சியின்ர பிரச்சினை பெரும் பிரச்சினையா மாறும் போல கிடக்குது. ஆனாலும் வீட்டுக் கட்சிக்குள்ள இருந்துகொண்டே கட்சியை முடக்கிற மாதிரி வழக்குப் போட்டவையில சனம் கடும் கோபத்தில இருக்குதெண்டதுதான் உண்மை. என்னதான் அவை 'யாப்பை மீறி கட்சி செயற்பட்டால் வழக்குப் போட்டுத் தட்டிக்கேக்கிறது பிழையோ?' எண்டு வெளியுலகத்துக்கு தங்களைச் சுத்தமான சூசையப்பர் மாதிரிக் காட்டிக் கொண் டாலும் அவையின்ர 'பீத்தல் பிணக்குகள்'எல்லாம் சனத்துக்கும் நல்லாத் தெரியும்.

திருகோணமலையிலையும், யாழ்ப்பாணத்திலையும் வழக்குப் போட்டவை உள்ளுக்கால கட்சியின்ர புதுத்தலைவருக்கும், பழைய தலைவருக்கும் தூது அனுப்பியிருக்கினமாம். தூது எண்டதை விடவும், 'டீலிங்' எண்டுறதுதான் உண்மை. கடைசியா நடந்த பொதுச்சபைக்கூட்டத்தில மத்திய குழுவால ஆராருக்கு என்னென்ன பதவி எண்டு ஒரு லிஸ்ட் வாசிச்சு, அதுக்கு அலாப்பித்தனமா ஒரு வாக்கெடுப்பும் நடந்து, பிறகு அந்தக் கள்ளவாக் கெடுப்பு செல்லாது எண்டதால கூட்டதை ஒத்தி வைச்சவையெல்லோ. அந்தப் பதவி லிஸ்டில உள்ள ஆக்களுக்கு அப்பிடியே முழுசா ரண்டு வருசமும் பதவியைக் குடுக்கிறதெண்டால் வழக்கை வாபஸ் வாங்கலாம் எண்டு கட்சியின்ர மேலிடத்தோட டீல் பேசியிருக்கினமாம். அப்ப வழக்குப் போட்டவைக்கு கட்சியின்ர யாப்பை மீறிக் கூட்டம் போட்ட தெண்டது ஒரு பிரச்சினையே இல்லை. பதவி மட்டும் தான் பிரச்சினை. பதவியைக் குடுத்தால் யாப்பை மீறினது எல்லாம் சரியாயிடும் எண்டால், உவையெல்லாம் என்னெண்டு சனத்துக்கு நேர்மையா இருப்பின மெண்டு நம்பிறது?

ஆனால் இவையின்ர வெருட்டுக்கு கட்சி மேலிடம் எடுபடாதாம். எது வந்தாலும் ஒருக்கா மோதிப்பாக்கிறதுதான் எண்ட நிலைப்பாட்டிலதான் மேலிடம் இருக்குதாம். இதை வழக்குப் போட்டவை எதிர்பாக்கேலை. இப்பிடி வழக்குப் போட்டால் வழக்கு ரண்டு வருசம் இழுபடும்.அதால டீலுக்கு ஓமெண்டுறதுதான் நல்லது' எண்டு பயப்பிடுத்தினால். உடனேயே கட்சிக்காரர் பணிஞ்சு போவினம், அதை வைச்சு டீலைப் பேசி முடிச்சு. தங்கட பவரைக் காட்டுறதுதான் அவையின்ர ஐடியாவாம். அதோட தங்களுக்கும் இதைச் சாட்டி மத்தியகுழுவுக்குள்ள இடம் தரச் சொல்லிக் கேக்கிற பக்கத்து இலைப் பாயாச விளையாட் டுக்கும் பிளான் பண்ணியிருக்கினம். ஆனால் சட்டம் எண்டது தனிய ஒராளின்ர சீதனம் எண்டு நினைச்சிட்டினம் போலகிடக்கு. இப்ப சொந்தக் காசிலையே தங்கட பக்கத்துக்கு சூனியம் வைச்சுப் போட்டினம்.இப்பிடி பதவிக்காக சொந்தக் கட்சியையே கூறாக்கி. ஒழுங்காக் கட்சியை நடத்தவிடாமல் செய்துபோட்டு, பிறகு அந்தக் கட்சியிலையே எலக்சன் கேட்டுப் போனால் சனம் விளக்குமாத்தைத் தானே கையில எடுக்கும்? தாங்கள் ஆதரிச்சவருக்கு ஐஸ் பண்ணுறதெண்டு நினைச்சு, கடைசியா தங்களுக்கும், தாங்கள் ஆதரிச்சவருக்கும் குழியைத் தோண்டி, அரசியல் தற்கொலை செய்ததுதான் மிச்சம் பாருங்கோ. தன்வினை தன்னைச் சுடும். ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.

(19.02.2024- உதயன் பத்திரிகை)

#eelamnews #srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate #புதினம்

358 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.