(பட்சி)
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம்" எண்டொரு பாட்டுக் கேட்டிருப்பியள். ஆனால் சில விசயங்களைக் காசு குடுத்தாலும் வாங்கேலாத நிலைமை முந்தி இருந்தது. இப்ப அதுகளையும் விக்கத் தொடங்கியிருக்கினம். கொஞ்சநாளைக்கு முதல் 'கலாநிதி', தேசமான்ய. 'தேசபந்து' எண்ட பட்டங்களை மலிவு விலையில சிலர் வித்துத் திரிஞ்சவை. இப்பவும் வித்துக்கொண்டுதான் இருக்கினம், அதை உண்மையான பட்டங்கள் எண்டு நினைச்சு கனபேர் வாங்கிக் கொண்டு மிருக்கினம். ஆனால், அப்பிடிப் பட்டங்களை விக்கிற 'பல்கலைக்கழகங்கள்' எங்க பதிவு செய்யப்பட்டிருக்கு எண்டு தேடினால், அப்பிடியொரு பல்கலைக்கழகமே உலகத்தில் இல்லை எண்ட விடைதான் கிடைக்கும். பட்டங்களை வித்து முடிஞ்சு. இப்ப லேட்டஸ்ட்டா இன்னொரு யாவாரத்தைச் சிலர் தொடங்கியிருக்கினம். அது. உலக சாதனையை விக்கிறயாவாரம்.
கையில காசு. வாயில சாதனைப் பதிவு எண்டமாதிரி காசு குடுத்தால் அதை உலக சாதனை எண்டு இவை அறிவிப்பினமாம்.உலகத்தில எல்லாரும் ஏற்றுக்கொண்ட சாதனைப் புத்தகம் எண்டால் அது 'கின்னஸ்' தான். அதுக் குத்தான் மரியாதையும் இருக்கு. கின்னஸை மாதிரி வேற சிலரும் அப்பிடி சாதனைப் புத்தகங்களை நடத்தினாலும், அதுகள் அவ்வளவு எழுப்பமுமில்லை, அதை ஆக்கள் மதிக்கிறதுமில்லை. அப்பிடி கின்னஸைக் கொப்பியடிச்சு, சிலர் வெளிக்கிட்டிருக்கினம். முக்கியமாக இந்தியாவில இருந்து வந்த இந்தக் கும்பலுக்கு காசைக் குடுத்தால் காணும். தோசை திண்டு சாதனை, வாகனத்துக்குப் பின்னால ஓடிச்சாதனை, நித்திரை கொள்ளுறதில சாதனை எண்டு இல்லாத சாதனையளையெல்லாம் சொல்லி, அதைச் செய்யிறவையையும் ஒரு உலக சாதனையாளர் எண்டு நம்பவைச்சுக் காசு கறக்கினம். இந்தியாவில நடக்கப்போற யோகாசன புரோக்கிராமில் கலந்துகொள்ளுற எல்லாருக்கும் உலகசாதனை செய்த சேர்ட்டிபிக்கட்டும். மெடலும் தாறம், காசைக் கட்டுங்கோ எண்டு கூவிக் கூவி விளம்பரம் செய்யினம்.
உலகசாதனையைப் பதியிறதெண்டால் அதுக்கு ஆயிரத்தெட்டு நடைமுறையள் இருக்கு. அதொண்டுமில்லாமல் சும்மா வாறவை போறவை எல்லாம். "உலகசாதனை" எண்டு சொன்னால் கேக்கிறவை என்ன கேனையரோ? அதிலையும் இப்பிடி உலகசாதனையை பிஸ்னஸ் செய்யிறவைக்கு ஒழுங்கா தங்களுக்கெண்டு கொம்பனியின்ர பேரில் ஒரு ஈமெயில்கூட இல்லை. கூகின்காரன் இலவசமாகக் குடுத்த 'ஜீமெயில்ல' தான் அவையின்ர யாவாரம் நடக்குது. அந்த லட்சணத்தில் அவை உலக சாதனை எண்டு உறுதிப்படுத்தி, அதைத் தங்கட புத்தகத்தில பதியப்போயினமாம். உவையள் உலகசாதனையளைப் பதியினம் எண்டால், அதைப்புத்தகம் அச்சடிச்சு விட்டிருக்க வேணுமெல்லோ. அப்பிடி அவை விட்ட உலக சாதனைப் புத்தகமேதும் இருக்கோ எண்டு கேட்டால்,அதுக்கும் மழுப்புகினம், தலையைச்சொறியினம். ஆனால் எங்கட கொம்பனியைப் பற்றி பிழையா ஆரும் சொன்னால் சட்டநடவடிக்கை' எடுப்பம் எண்டு வெருட்டு வேற. ஆனால் அப்பிடி அவை சட்டநடவடிக்கைக்குப் போனால், முதல்ல இவைதான் மோசடி செய்ததுக்கு ஈட்டுப்படுவினம் எண்டது தெரியாது போல.
உண்மையில இப்பிடி உலகசாதனை செய்ய ஆசைப்படுறவை 'கின்னஸ்'காரரோட தொடர்பு கொண்டால், அவங்களே வந்து இலவசமா உங்கட சாதனையளைப் பதியிற வசதி இப்ப எல்லா நாட்டிலையும் இருக்குது, அதைவிட்டிட்டு இப்பிடி மோசடிக்காரர் தாற உலகசாதனையை' பெருமையா நினைக்கிறவையையும் சனம் பேய்க்காட்டுக்காரர் எண்டு சொல்லிப்போடும் கவனம்.
(06.03.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.